நுவரெலியா புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் இன்று, பகல் 12 மணியளவில் தீபரவல் ஏற்பட்டது. சமையல் எரிவாயு கசிவினால் ஹோட்டலின் சமையலறையில் தீ பரவல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் இத்தீ விபத்தினால் பாரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படும் அதேவேளை , பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.