கடந்த 31-12-2024 திகதி ஹேக் செய்யப்பட்ட அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டதாகவும் அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனலும் வெள்ளிக்கிழமை முதல் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனலை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் இன்னும் நடந்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.