முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.