ஹட்டன்-டிக்கோயா-தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில் இன்று (22) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் நான்கு வீடுகள் தீயினால் பகுதி அளவில் எரிந்து நாசமாகியுள்ளது.
இதனையடுத்து அந்த வீடுகளில் இருந்த 20 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீ விபத்தின் போது, எவருக்கும் தீ காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு, சில பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் தீயைக் கண்டு கூச்சலிட்டதாகவும், இதனையடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.