மத்திய மாகாண வேலையில்லா பட்டதாரிகளின் கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஹட்டனில்(Hatton) நடைபெற்றுள்ளது.
குறித்த கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நேற்று (16.06.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களின் கண்டனப் பேரணி ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பித்து மல்லிகைப்பூ சந்திவரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், இன்றும் மலையகத்தில் கணித விஞ்ஞான பட்டதாரிகளை உருவாக்காதது யாரின் தவறு, பட்டப்படிப்பு வாசலில் பட்டதாரிகள் வீதியில் என பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“ பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று ஒரு வருடங்களுக்கு மேலாகின்ற நிலையில் பட்டம் பெற்ற எவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
அரசாங்கம் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளை கவனத்திற்கொண்டு நியமனங்களை வழங்க முன்வரவேண்டும் “என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கண்டனப்பேரணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

