இன்று பெரும்பாலான பயன்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் ஒன்று தான் நோக்கியா. பல நிறுவனங்கள் புதிய புதிய மொடல்களை சந்தையில் கலமிறக்கி வரும் நிலையில், அதற்கு ஈடாக நோய்கியாவும் 5ஜி மொபைல் போனை அறிமுகப்படுத்துகின்றது.
ஆம் நாளை செப்டம் 6ம் தேதி அறிமுகமாக உள்ளதாக கூறப்படும் நோக்கியா 5ஜி மொபைலின் சிறிய முன்னோட்டத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் பயன்படுத்தும் மொபைல் போனின் வேகத்தினை அதிகரிப்பதற்கு ஏற்ற விதமாக சந்தையில் மொபைல்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
நாளை வெளியாகும் Nokia 5G குறித்த விபரம் தெரியாத நிலையில், கடந்த ஆண்டு Nokia X30 அறிமுகத்துடன் வெளியீட்டு தேதி ஒத்துப்போவதால், இது ஒரு புதிய X தொடர் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நோக்கியா (Nokia) இப்போது புதிய ஃபீச்சர் போன்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில், நிறுவனம் நோக்கியா C12 மற்றும் 2660 ஃபிளிப்புக்கான சில சிறப்பு வண்ண வகைகளையும் அறிமுகப்படுத்தியது.
HMD-க்கு சொந்தமான நிறுவனம் இதற்கு முன்னர் 5G ஸ்மார்ட்போனான Nokia X30 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபோனில் 6.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது.
இது 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் அதிகபட்சம் 700 nits பிரகாசம் கொண்டது. இதன் HD + டிஸ்ப்ளே 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷனை வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 SoC ஆல் இயக்கப்படுகிறது, இதில் Adreno 619 GPU உள்ளது. இது மூன்று சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது – 128 ஜிபி + 6 ஜிபி ரேம், 128 ஜிபி + 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி + 8 ஜிபி ரேம்.
கேமரா பிரிவில், இது 50MP முதன்மை சென்சார் மற்றும் 13MP அல்ட்ராவைட் லென்ஸுடன் பொருத்தப்பட்ட இரட்டை பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் என்று வரும்போது, முன்புறத்தில் 16எம்பி கேமரா உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், நோக்கியா நிறுவனம், C12 Pro இன் இந்த புதிய வண்ண மாறுபாட்டை சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
இந்த போனின் விலை 7 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வலுவான பேட்டரி மற்றும் அட்டகாசமான கேமரா கிடைக்கின்றன. இது தவிர, இந்த போனின் வடிவமைப்பும் மிக சிறப்பாக உள்ளது.