முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அரசாங்க கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை உண்மைக்கு புரம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அரசாங்க கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பௌத்த பிக்கு ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் இன்று மறுத்துள்ளது.
முன்னாள் முதல் பெண்மணி பல ஓய்வூதியங்களையும் அரசாங்க கொடுப்பனவுகளையும் பெற்று வருவதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வண. வலஹாஹெங்குனாவேவே தம்மரதன தேரர் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையில் பிக்குவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம், வண. தம்மரதன தேரர் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை கூறியதாகவும் , எனவே இந்தக் கூற்றுக்கள் கடுமையாக நிராகரிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.