வைத்தியதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தினால் வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் முற்றாக முடகியுள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மாவட்டத்திலுள்ளள அனைத்து வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.
நோயாளர்கள் ஏமாற்றம்
அவசர சத்திரசிகிச்சைகள் சேவைகள் தவிர வெளிநோயாளர் பிரிவு, கிளினிக்குகள் உட்பட அனைத்து வைத்தியசாலை பணிகளும் ஸ்தம்பிதமடைந்தன.
வேலைநிறுத்தம் காரணமாக கிளினிக் சேவைகள் இடம் பெறாமையினால் தூர இடங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
அதோடு இந்த வேலை நிறுத்ததால் இன்று நடைபெறவிருந்த பல சத்திர சிகிச்சைகளும் இடம் பெறவில்லை எனவும் கூறப்படுகின்றது.