யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உணவு தயாரிப்பு இடத்தில் இன்று எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.