வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கட்டிடத்தை ஆய்வு செய்ததில், மருந்துகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அலுமாரிக்கு அருகில் மின் ஒழுக்கு ஏற்பட்டதன் காரணமாக தீப்பிடித்ததுள்ளமை தெரியவந்துள்ளது.
களஞ்சியசாலையில் இருந்த மருந்துகளில் ஒரு சிறிய பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.