குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் தனது தாயுடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுவனின் தங்க நகைகளை வைத்தியர் போல நடித்து ஏமாற்றி திருடிச் னெ்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (25) வியாழக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவனின் திருடப்பட்ட தங்க நகைகள் சுமார் 3 இலட்சத்து 82 ஆயிரம் ரூபா பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுக்கனே குபுகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.
இதன்போது, தன்னை வைத்தியர் எனக் கூறிய நபரொருவர் சிறுவனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்று, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி பையில் போடுமாறு கூறியுள்ளார்.
அதன்பின்னார் வைத்தியசாலையில் உள்ள கதிரையில் சிறுவனை அமரச் செய்து தங்க நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.