உடலில் வியர்வை அதிகமாக வெளியேறும் போது உப்பை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்ற தகவல் வேகமாக பரவி வருவதால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் இதுவொரு உண்மைக்குப் புறம்பான கூற்று என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் பிரதம ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உடலில் வியர்வை அதிகமாக வெளியேறும் போது உப்பை அதிகம் உட்கொள்ள வேண்டும் என கட்டுக்கதை பரவி வருவதாகவும் அவற்றினை நம்ப வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு மட்டுமே போதுமானது.
வீட்டிற்கு கொண்டு வரும் உப்பின் அளவை குறைத்தால் தேவையில்லாமல் உடலில் சேரும் உப்பு குறையும் என ரேணுகா ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம். உடலுக்கு அதிகளவில் உப்பை சேர்த்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்