பிரபல சர்வதேச நிறுவனமொன்று வெள்ளவத்தையில் தனது நிறுவன கழிவுப்பொருட்களை வீசியுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
அதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொழும்பு மாநகரசபையின் நான்கு கடற்கரைகளில் இதுவுமொன்று என தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள சமூக அரசியல் ஆய்வாளர் பிரசாத்வெலிகும்பர, மக்கள் நீராடுவதற்காக பயன்படுத்தும் ஒரே கடற்கரை இதுவெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த சனிக்கிழமை தான் நாங்கள் இந்த இடத்தை துப்புரவு செய்திருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் பொறுப்பற்ற செயலுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த சில நாட்களாக கொழும்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் சர்வதேச நிறுவனமொன்று இவ்வாறு குப்பைகளை மக்கள் நடமாரும் இடம்ங்களில் கொட்டியுள்ளமை க?ண்டிக்கத்தக்கதாகும்.