சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கில் சிக்கிய தந்தை, மகனின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளியாப்பிட்டிய விலபொல பகுதியில் உள்ள மேலதிக வகுப்பிற்கு சென்ற தனது 11 வயதுடைய மகனை வீட்டுக்கு அழைத்துவரும் போது அவர்கள் இந்த விபத்தில் நேற்று (09) சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
38 வயதுடைய தந்தையின் சடலம் நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றிருந்ததுடன் மகனனின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாதம்பை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் குறித்த சிறுவன் புலமைபரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.