ஹம்பாந்தோட்டை – தங்காலை பகுதியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் அநாகரிகமாக நடந்துக் கொண்ட குற்றச்சாட்டில் 13 வயது சிறுவன் கடந்த (03.03.2024) ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் கடந்த (02.03.2024) ஆம் திகதி மோதரவெல்லை குடாவெல்ல பகுதியில் தனியாக நடந்து சென்று பார்வையிட்டபோது குறித்த பாடசாலை மாணவன் தனது நாயுடன் வந்து பெண்ணிடம் பேச ஆரம்பித்துள்ளார்.
பின்னர் அழகான இடத்தை காட்டுவதாக கூறி, அந்த பெண்ணை கடற்கரை அருகே உள்ள வாட்கேயா புதருக்கு அழைத்துச் சென்று மானபங்கம் செய்ததாக திக்வெல்ல, ஹிரிகட்டிய பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தங்காலை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில சேனாபதி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த பாடசாலை மாணவனை பிரெஞ்சு பெண் அடையாளம் காட்டியதற்கமைய கடந்த (03.03.2024) ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் போது குடாவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரியவந்துள்ளது.
இலங்கை ஒரு அழகான நாடு என்பதால், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்குமாறும் தலைமை பொலிஸ் பரிசோதகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சந்தேகத்திற்குரிய குறித்த மாணவன் இன்னும் குழந்தையாக இருப்பதால் எச்சரித்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என முகநூல் வாசி ஒருவர் குறித்த விடயம் பற்றி பதிவேற்றியுள்ளார்.