வெளிநாட்டு உத்தியோகபூர்வ பயணங்களின்போது சிரேஷ்ட அரச அதிகாரிகள் விமானங்களில் வணிக வகுப்பில் பயணிப்பதை கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை, ஜனாதிபதி செயலகம் விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலகங்களில் பணியாற்றுபவர்கள் உட்பட, சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு, விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இதுவரை சலுகைகளை அனுபவித்த, பல அதிகாரிகள், விமானங்களில் சாதாரண வகுப்பில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவுள்ளது.
இந்த சுற்றறிக்கை செலவினங்களைக் குறைக்கும், அரசின் கொள்கையின்படி, வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.