பதுளையில் வெளிநாட்டுத் தொழிலுக்காக சட்டவிரோதமாக நபர்களை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஜப்பான், இத்தாலி மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் தொழில்வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி சில நபர்களிடம் அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.