வெளிநாட்டில் இருப்பவர்களிடம் பணங்களை பெற்று யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள், வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், 2 வாள்கள் மற்றும் 4 பெற்றோல் குண்டுகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழில் இயங்கிய வரும் வன்முறை கும்பலுடன் தொடர்புடைய நபரொருவர் தற்போது இலங்கையில் இருந்து தப்பியோடி இந்தியாவில் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் உள்ள நபர்கள் இந்தியாவில் உள்ள நபருக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கி, யாழில் தாக்குதல் சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், அவர்களுடன் சேர்ந்து இயங்கிய நபர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.