அண்மையில் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி, நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அப்போதைய சிறை நிர்வாகம் மற்றும் சிறை மறுவாழ்வுத்துறை இணை அமைச்சராக செயற்பட்ட லொஹான் ரத்வத்த வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று மேற்கொண்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை விசாரிக்க இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.