வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரனின் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணையில், மூவர் இன்று ( 26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில்,
வெலிகம பிரதேச சபைத் தலைவரான லசந்த விக்ரமசேகர மீது கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி காலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
இச் சம்பவம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத மர்மநபர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான லசந்த விக்ரமசேகரை உடனடியாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் மக்கள் மத்தியிலும் அரசியலிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது இந்த கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணையில், மூவர் இன்று ( 26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை கெகிராவ பிரதேசத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் இருக்கிறார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன.

