வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி வழிபாடுகளின்போது பொலிஸார் மேற்கொண்ட அராஜகங்களைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டமானது இன்று (2024.03.16) சனிக்கிழமை வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு தமிழ் அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்று காலை 07.30 மணிக்கு யாழ். நல்லூர் ஆலய முன்றலில் இருந்து வவுனியாவுக்கு வாகனப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.