வெலிசர பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் இருந்து வெடிபொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில் விமான படை அதிகாரி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான குறித்த கிடங்கில் இருந்து குறித்த வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக விமானப்படை ஒழுக்காற்று பணிப்பாளரினால் செய்யப்பட்ட
முறைப்பட்டிற்கு அமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இவ்வாறு திருடப்பட்ட 70 கிலோ 700 கிராம் வெடிபொருடன் முச்சக்கரவண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் குறித்த வெடிபொருள் கிடங்கிற்கு பொறுப்பாக இருந்த விமான படை அதிகாரி மற்றும் கடற்படை அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.