வீட்டில் எப்பொழுதும் பணத்தின் பெருக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. இதற்கு சில வாஸ்து சாஸ்திரமும் உள்ளது. பணத்தினை ஈர்க்கும் சில பொருட்களை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்.
பணம் பெருக என்ன செய்ய வேண்டும்?
வாங்கும் சம்பளத்தில் முதல் செலவு “சேமிப்பு” என்ற பழக்கத்தை கடைபிடியுங்கள்.
வினை தீர்க்கும் விநாயகர் சிலை ஒன்றினை வாங்கி வைக்கலாம். பொதுவாக வீடுகளில் சிலை வைக்கும் போது நம் கட்டை விரல் அளவில் தான் இருக்க வேண்டும்.
இதைப் போன்று ஆமை பணத்தினை பெருக வைக்கும் என்று கூறப்படுகின்றது. ஆம் ஆமையை வீட்டிற்குள் வருவது போன்று வரவேற்பறையில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
யானைகள் ஒன்றை ஒன்று எதிராக பார்த்துக் கொள்வது போன்ற பொம்மை வாங்கி வைத்தால் கண் திருஷ்டி நீங்க, பணம் பெருகுமாம்.
கன்றுடன் இருக்கும் பசுவின் சிலையை வீட்டில் பூஜை அறையிலோ, வரவேற்பறையிலோ வைக்கலாம். இவ்வாறு வைப்பதால் வீட்டில் நல்ல விசேஷம் ஏற்படுமாம்.
தினமும் செய்ய வேண்டியது?
தினமும் காலையில் படுக்கையை விட்டு எழுந்த உடனே யார் முகத்தையும் காணாமல் தண்ணீர் 2 மடக்கு குடித்தால் உங்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் கிடைப்பதுடன் அன்றைய தினம் கோபமே வராதாம்.