ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான பொருட்களும், உபகரணங்களும் வைத்திருப்போம்.அவரவர்கள் மனம் விரும்பிய பொருட்களை அவர்களுடைய இல்லங்களில் வாங்கி வைப்பது உண்டு.
இதில் வாஸ்து மற்றும் ஆன்மீகம் இரண்டும் தனித் தனியாகப் பார்க்கப்பட வேண்டும். ஒரு சில வாஸ்து பொருட்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பார்கள். அது வாஸ்து ரீதியாக கொடுக்கக்கூடிய அதிர்ஷ்டம் ஆகும். ஆனால் ஆன்மிக ரீதியாக கொடுக்கக்கூடிய அதிர்ஷ்ட பொருட்கள் எது என இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
மீன்கள்
சில விஷயங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று கூறுவார்கள். அது போல் உள்ள ஒரு நிலைமை இந்த மீன் வளர்ப்பவர்களுக்கு வருவதில்லையாம். சிறிய சிறிய வண்ண மீன்களும், கோல்டன் ஃபிஷ் என்று சொல்லப்படும் சொர்ண வண்ண மீன் வளர்ப்பதும் பேரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதிலிருந்து ஒரு மீன் இறந்து போனால் கூட அது உங்களுக்கு வந்த ஆபத்தை எடுத்துக் கொண்டதாக அர்த்தமாகிறது.
இசை கருவி
இசை கருவிகளை வாசிக்க தெரியாவிட்டாலும் வீட்டில் வைத்திருந்தால் போதும் அவ்வளவு நல்ல அதிர்ஷ்டங்கள் வருமாம். இசைக் கருவிகளை வாங்க முடியாவிட்டால் அதன் படத்தையாவது வரவேற்பறையில் ஒட்டி வைப்பது நல்ல அதிர்ஷ்ட பலனைகளைக் கொடுக்கும். இசைக் கருவிகளுக்கு அவ்வளவு ஒரு மகத்துவமான ஆற்றல் உண்டு.
வெள்ளியாலான சுவாமி சிலை
நீங்கள் ஒருவருக்கு பரிசளிப்பதாக இருந்தாலும், அடுத்தவர்கள் உங்களுக்கு கொடுத்த பரிசாக இருந்தாலும் அது வெள்ளியாலான ஏதாவது ஒரு சுவாமி சிலை விக்கிரகமாக இருந்தால் அதிர்ஷ்டம் மென்மேலும் பெருகும்.
தொழில் நஷ்டம், வியாபார நஷ்டம் அடைந்தவர்கள் இது போல் வெள்ளி விக்கிரகங்களை வைத்து பூஜை செய்தால் மீண்டும் நலிவடைந்த தொழில் விருத்தி அடையும். இந்த பொருட்களெல்லாம் வீட்டில் வைத்திருந்தால் அந்த வீட்டில் அதிர்ஷ்டம் கட்டாயம் பெருகும் என்பது ஐதீகம்