ஹோமாகம, நியந்தகல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த நபர் தனது வீட்டில் இருந்த போது இனந்தெரியாத நபர்களால் குறித்த நபரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்ய ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 46 வயதான ஹோமாகம, நியந்தகல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.