வாழைச்சேனையில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (‘ஐஸ்’) உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த 23 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை செம்மன்னோடை கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை சேதனையிட்ட போது, 53 கிராம் ஐஸ் போதைப்பொருள், 24 கிராம் கேரளா கஞ்சா, 2500 போதை மாத்திரைகள் மற்றும் 86000 ரொக்கம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.