பாணந்துறையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 82 கையடக்கத் தொலைபேசிககள் மீடக்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (27) அதிகாலை நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 82 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சந்தேக நபர் தனது மகனுடன் வீட்டில் வசித்து வருவதாகவும், சோதனையின் போது அவர் வீட்டில் இல்லாததால், அவர் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.