உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் போது வீட்டுத்தோட்டத்தில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கமோ அல்லது வர்த்தக அமைச்சரோ ஒரு நாட்டுக்கு தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தமது வீட்டு முற்றத்தில் சொந்தமாக மரக்கறிகளை பயிரிடுவதில் கவனம் செலுத்துமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பொதுமக்களிடம் விடுத்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே ராஜித மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிராமப்புற மக்களுக்கு வீடுகளில் பயிர்களை வளர்க்கும் திறன் இருந்தாலும், நகர்ப்புற மக்களுக்கு அவ்வாறான வசதிகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமானால், அரசாங்கத்தின் அமைச்சர்கள் வீட்டிலேயே சாவது எப்படி என்பதை மக்களுக்கு கற்பிக்க வேண்டியிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.