குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்துக்குள் இரு பெண்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை கட்டுப்படுத்தச் சென்றபோதே அதிகாரி தாக்கப்பட்டுள்ளார்.
விலக்கு பிடிக்க சென்ற அதிகாரி
சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்துக்குச் சென்றனர். இதன்போது அவர்களது முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே இருவரிடயே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதன்போது அவர்களை அடக்க முயன்ற பொலிஸ் பொறுப்பதிகாரி மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதல் தொடர்பில் மத்துகம உபில்கம பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்