விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் சீசன் 6 இன்னும் 13 நாள்களே உள்ள நிலையில், 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த வாரத்தில் பணப்பெட்டி அறிமுகப்படுத்தப்படும். இறுதி வாரம் வரை சென்று வெற்றி பெற முடியாது என நினைக்கும் போட்டியாளர் சம்பள பணத்துடன் பணப்பெட்டியையும் எடுத்துச் செல்லலாம்.
போட்டியாளர்களின் குறை
அதற்கு முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் முன்னாள் போட்டியாளர்கள் வருகை தந்து போட்டியாளர்களின் குறைகளை எடுத்துரைப்பார்கள். இதன்மூலம் போட்டியாளர்களின் தன்நம்பிக்கை குறைய பெரிதும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக வருகிறார் சுரேஷ் சக்ரவர்த்தி என்கிற சுரேஷ் தாத்தா.
இவர் போட்டியாளராக இருந்த சீசனில் எல்லை மீறிய கருத்துகளை தெரிவித்தும், போட்டியாளர்களுக்கு இடையே கொளுத்திப் போட்டும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது .