தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் அவர்கள் “மக்களின் தேவை அறிந்து சேவை செய்யும் தலைவரான சஜித் பிரேமதாச விரைவில் நாட்டின் தலைவராவார். அவரின் ஆட்சிகாலமானது மலையகத்துக்கு பொற்காலமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு நேற்று (29.10.2022) காலை அவர் பாடசாலை பேருந்து ஒன்றினை வழங்கியுள்ளார்.
இதனை தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பேருந்து கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.