மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யவேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலத்தில் வியாழேந்திரன் உண்ணாவிரதம் இருந்தபோது , மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வியாழேந்திரனுடன் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அம்பிட்டிய தேரருக்கு ஆதரவாக வியாழேந்திரனும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்,
தமிழர்கள் தொடர்பாகவும் தமிழர்களது சமயம், கலாசாரம் தொடர்பாகவும் மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டு வந்த ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள 04 வருட கடூழிய சிறைத்தண்டனை வரவேற்கக்கூடிய ஒன்று என்றும் வியாழேந்திரன் கூறினார் .
இவ்வாறான நிலையில் , மட்டக்களப்பிலும் இனவாத போக்குடைய அம்பிட்டிய தேரர் இருக்கின்றார் என்றும், அவர்களுக்கும் இது போன்று தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என தனக்கு ஆதரவு வழங்கிய தேரரை கைது செய்ய வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிததுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.