கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளாதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் பிரகாரம் நேற்று (2024.06.24) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
நீதவான் சடலம் தொடர்பான விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பொல்பிடகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியதவனய பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் மியாகோ நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மலஸ்ன, பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் ஒரு மாத காலமாக வைத்தியசாலையில் இருந்ததாகவும் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொல்பித்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.