முன்பதிவு செய்த ஸ்ரீலங்கன் எயார் விமானம் தாமதமாக இரத்து செய்யப்பட்டதால், கொரியாவில் வேலைக்குச் செல்லவிருந்த 100 இலங்கைத் தொழிலாளர்களுக்கு அவர்கள் வீடு திரும்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டில் இலங்கையில் இருந்து 100 பணியாளர்களும் நேற்று முன்தினம் (19) இரவு கொரியாவுக்குச் செல்லவிருந்தனர்.
இந்நிலையில் விமானம் திடீரென தாமதமானதால் விமான நிலையத்தில் கடும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு இறுதியாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் அனைவரும் திரும்பிச் சென்றுள்ளனர்.
இக்குழுவினரை குறித்த நேரத்தில் அனுப்ப முடியாத காரணத்தினால், எதிர்வரும் 3ஆம் திகதி வரை அவர்களை கொரியாவுக்கு அனுப்ப வேண்டாம் என கொரியாவின் மனிதவள திணைக்களம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதெவேளை 100 பேர் கொண்ட குழுவில் ஆறு பேர் கொரியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக வட்டார தகவல்கள் கூறுகின்றன.