விமானங்களின் ஏர் ஹோஸ்டஸ் (Air Hostesses) பணியில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு, குறிப்பாக ஒல்லியான பெண்களுக்கு, ஏன் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன எனபதை பற்றிய ஒரு தகவல் உங்களுக்காக..
விமானங்களில் ஏர் ஹோஸ்டஸ்களாக தற்போது பெரும்பாலும் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பணியில் ஆண்களை பெரும்பாலும் பார்க்க முடிவதில்லை.
இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், ‘அழகு’ என்பதைதான் நம்மில் பலரும் பதிலாக சொல்வார்கள். அழகாக இருப்பதால்தான் பெண்களுக்கு அந்த பணி வழங்கப்படுகிறது என்பது பலரின் எண்ணம்.
ஆனால் இந்த கருத்து முற்றிலும் தவறானது. விமான நிறுவனங்கள் இந்த பணிக்கு ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
இதில் ஒரு சில காரணங்கள் உங்களை நிச்சயமாக ஆச்சரியப்படுத்தும். அந்த காரணங்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பயணிகளை எளிதில் கவரக்கூடியவர்களாக பெண்கள் இருப்பதுதான் முதல் காரணம். ஏர் ஹோஸ்டஸ்களாக பெண்கள் இருந்தால், பயணிகளுக்கு அன்பான வரவேற்பு கிடைக்கும்.
பொதுவாக ஆண்களின் பேச்சை விட பெண்களின் பேச்சைதான் மக்கள் அதிகம் கேட்கின்றனர் என்பது இரண்டாவது காரணம். பெண்களே பெரும்பாலும் ஏர் ஹோஸ்டஸ்களாக நியமிக்கப்படுவதற்கு பின்னால் உள்ள சிறிய உளவியல் இது.
பொதுவாக விமானங்களில் பயணிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அத்துடன் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளும் செய்யப்படும். எனவே இந்த பணியில் ஆண்களை காட்டிலும் பெண்கள் இருந்தால், பயணிகள் அனைவரும் மிக கவனமாக கேட்பார்கள் என்பது பெரும்பாலான விமான நிறுவனங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இயற்கையாகவே ஆண்களை காட்டிலும் பெண்கள் இனிமையானவர்களாக இருப்பது மூன்றாவது காரணம். எனவே பயணிகளின் திருப்திக்காக பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண்களை பேசுவதை எப்படி அனைவரும் கேட்கின்றனரோ, அதேபோல் பெண்களும் அனைத்தையும் நன்றாக கேட்க கூடிய திறன் வாய்ந்தவர்கள்.
எனவே விமானத்தில் வரும் பயணிகளை எப்படி கையாள வேண்டும்? என்பதை நிர்வாக ரீதியில் அவர்களுக்கு எளிமையாக பயிற்சி அளிக்க முடியும். ஏர் ஹோஸ்டஸ்களாக பெண்கள் அதிகளவில் பணியமர்த்தப்பட்டு வருவதற்கு இது நான்காவது காரணம். ஐந்தாவது காரணத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
பெண்கள் பொறுமைசாலிகள் மற்றும் திமிர், கர்வம் கொண்டவர்கள் அல்ல என்பதுதான் ஐந்தாவது காரணம். (எனது காதலியோ அல்லது மனைவியோ அப்படி இருப்பதில்லையே என்ற உங்கள் ‘மைண்ட் வாய்ஸ்’ கேட்கிறது. ஆனால் பொதுவாக பொது விஷயங்களில் பெண்கள் பொறுமைசாலிகளாகவும், கர்வம் அற்றவர்களாகவும்தான் நடந்து கொள்கின்றனர்).
ஆறாவது காரணம் உங்களுக்கு நிச்சயம் வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இதுதான் உண்மை. பொதுவாக பெண்கள் எடை குறைவானவர்கள். இதன் மூலமாக எரிபொருள் சேமிக்கப்படும் என்பதுதான் ஆறாவது காரணம். விமான நிறுவனங்கள் அனைத்தும் பொதுவாகவே எடைக்கு மிக அதிக முக்கியத்துவத்தை வழங்குகின்றன.
விமானத்தின் எடை குறைவாக இருந்தால், குறைவான எரிபொருள் மட்டுமே பயன்படுத்தப்படும். எரிபொருள் சேமிக்கப்படுகிறது என்றால், விமான நிறுவனங்களுக்கு செலவு குறைந்து, பணம் சேமிக்கப்படுகிறது என்று அர்த்தம்.
ஒப்பீட்டளவில் ஆண்களை காட்டிலும் பெண்கள் எடை குறைவானவர்கள். பெண்களின் இந்த குறைவான எடை விமான நிறுவனங்களுக்கு ஒரு ‘ப்ளஸ்’ ஆக பார்க்கப்படுகிறது.
விமானங்களில் ஏர் ஹோஸ்டஸ்களாக ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகளவில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்றாலும் கூட, இந்த பணியில் குண்டான பெண்களை நீங்கள் ஒருபோதும் காண முடியாது. இந்த பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் ‘ஸ்லிம்’ ஆன தோற்றம் கொண்டவர்களாக, அதாவது ஒல்லியானவர்களாக மட்டுமே இருப்பார்கள்.
விமான நிறுவனங்களின் ‘குறைவான எடை கொள்கை’ இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படி அழகு என்பதை கடந்து, விமான நிறுவனங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. எனவே ‘அழகு’ என்ற காரணத்திற்காக மட்டும்தான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என சொல்லாதீர்கள்.