அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியரொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சடலமாக மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொல்லாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் 38 வயதுடைய சாமர சதுரங்க எனவும் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த வைத்தியரின் மனைவி தம்புத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமை ஆற்றி வருகிறார்.
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேவ பகுதியில் மனைவியின் தாயாரின் வீட்டில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த வைத்தியரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.