திருகோணமலை – மூதூர், பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (20) மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இடம்பெற்றுள்ளது.
கந்தளாயில் இருந்து சேருவிலவுக்குச் சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது அதில் 21 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பத்திற்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தோரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துச் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.