பாணந்துறையில் இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றின் கிளை முகாமையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பழங்களை ஏற்றிச் சென்ற லொறியில் மோதி முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
பொரலஸ்கமுவ, வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஹபுதந்திரிகே மதுர காரியவசம் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பாணந்துறையிலிருந்து பண்டாரகம நோக்கிச் சென்றபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.