கொழும்பு – கண்டி வீதியில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, எதிர்திசையில் வந்த பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, வேனில் 6 இராணுவ அதிகாரிகள் இருந்ததாகவும், அவர்களில் 5 பேர் காயமடைந்து வத்துப்பிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
பொல்ஹேன்கொடை இராணுவ முகாம் அதிகாரிகள் குழுவொன்று கிரிதலே முகாமிற்கு கடமைகளுக்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் விபத்து தொடா்பில் பௌசரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.