மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியிலிருந்து 03 பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டவர்களில் விபச்சார விடுதியின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தல, புளத்சிங்கள மற்றும் அக்குரெஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று பெண்களும் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய உரிமையாளருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து விபச்சார விடுதியை நடத்தி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.