யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் புலம்பெயர் சுவிஸ்வாழ் தமிழரான தர்மலிங்கம் யோகேஸ்வரன் என்பவர் கூறிய தகவல் புதுக்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிச்லாந்தில் உள்ள இந்து பௌத்த சங்கத்தின் அமைபின் தலைவர் என குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அவர் சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் வசிப்பதாகவும் கூறியுள்ளார்.
அதாவது மாணவி வித்தியாகொலை வழக்கின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் சுவிஸ் குமார் என்பவரை சுவிஸ் பொலிஸாருக்கு தெரியாது எனவும் , இலங்கை அரசாங்கம் சுவிஸ் குமாரை சிறு குற்றச்செயல் ஒன்றுக்காக மட்டுமே கைது செய்ததாக , சுவிஸ் பொலிசாரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கடந்த 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டி உலுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.