உடலின் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து வைட்டமின் பி12 நமது உடலுக்கு தேவையான ஆற்றல், நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் ரத்த சிகப்பணுக்கள் அதிகப்படுத்துதல் போன்ற பல நன்மைகளை செய்கிறது.
உடலில் வைட்டமின் பி12 குறைவதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்,.
உதாரணமாக தோல் வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளிப்பது, தொண்டைப்புண் மற்றும் நாக்கு சிவந்து போதல், எரிச்சல், மனசோர்வு, பார்வை கோளாறு, வாய்ப்புண்கள் போன்றவை.
உடலின் ஆற்றல் மூலமாக விளங்கும் வைட்டமின்-பி12ஐ தினசரி உணவின் மூலம் பெற வேண்டும்
வைட்டமின்பி12 அதிகளவு உள்ள உணவுகள்
வைட்டமின்பி12 ஆனது மாட்டிறைச்சியில் அதிகளவில் உள்ளது, 190கி ஸ்டீக்கில் 11.2 எம்சிஜி கிடைக்கிறது, மாட்டிறைச்சியில் இன்னும் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
இது எலும்பு, தசைகள் மற்றும் செல்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
இதில் இரும்பு, துத்தநாகம், செலினியம் மற்றும் எண்ணற்ற வைட்டமின்கள் உள்ளன.
ஈஸ்ட்டில் வைட்டமின்-பி12 அதிகமுள்ளது, சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அசைவ அல்லாத சில ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது.
5கி ஊட்டச்சத்து ஈஸ்ட்டில் 2.2எம்சிஜி உள்ளது, பாஸ்தா, சாலட், ஸ்மூத்தி போன்றவற்றின் கெட்டித்தன்மைக்கு இது உதவுகிறது.
வைட்டமின்-பி12 பாலில் மட்டுமல்லாது பாலாடைக்கட்டி, தயிர், போன்ற பல பால் சம்மந்தப்பட்ட பொருட்களிலிருந்து கிடைக்கிறது.
தானிய வகைகளில் அதிகளவு வைட்டமின்-பி12 கிடைக்கிறது, 1 கப் தானியம் கிட்டத்தட்ட 14 வாரங்களில் ஒருவரது உடலில் வைட்டமின்-பி12 சத்தை அதிகரிக்கிறது.
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்றவற்றில் வைட்டமின்-பி12 அதிகம் நிறைந்துள்ளது.
ஆட்டின் 3.5 அவுன்ஸ் கல்லீரலில், 85.7எம்சிஜி வைட்டமின்-பி12 கிடைக்கிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின்-ஏ கண்பார்வையை மேப்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.