விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சில தினங்கள் ஆயுதங்கள் இல்லாத நிலையும் காணப்பட்டிருந்தது. அவற்றை ஊடகங்களுக்கு அன்று சொல்லியிருந்தால், விடுதலைப் புலிகள் அன்றே எமக்கு அடித்திருப்பார்கள்.
ஆகவே எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இதனை குறிப்பிட்டிருந்தார்.