விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள முகிழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ´முகிழ்´. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கேசன்ட்ரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் சார்பாக விஜய் சேதுபதியே இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தை கார்த்திக் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். சத்யா பொன்மர் ஒளிப்பதிவு செய்ய, ரேவா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி படங்களின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இந்தப் படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.
இந்தப் படம் வருகிற அக்டோபர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் வெறும் 1 மணி நேரம் 2 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடியது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இந்தப் படத்தில் நாயின் கதாப்பாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.