வாழை செய்கையை ஏற்றுமதி செய்யும் நிலைமைக்கு” என்ற அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ் வருடாந்தம் 52 ஆயிரம் கிலோகிராம் புளிவாழையை உற்பத்தி செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதிக்காக பொதுவான வேலைத்திட்டம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒரு மெற்றிக் டன் புளிவாழையை, 600 முதல் 700 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில், 28 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்றுமதியின் மூலம் வாழை செய்கை தொடர்பான முறையான வேலைத்திட்டம் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.