முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநகர் பகுதியில் நேற்று (8) இரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் சம்பவத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்த ஆறு பேரும் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மல்லாவிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.