மதுபோதையில் வாகனம் செலுத்தினால் கைது செய்யப்படுபவர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்காமல் இருப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அதிகாரம் இருந்த போதிலும் , தற்போது அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எனவே, இனிமேல் பொலிஸாரால் கைது செய்யப்படும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்காமல் நேரடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனத்தை சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் மூன்றாம் நபரொருவரிடம் ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளபோதிலும், அது நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னரே வாகனம் விடுவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து டிஐ.ஜி. சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடனான சந்திப்பில் இவ்விடயம் குறித்த அறிவுறுதல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.