நாடு முழுவதும் இன்று முதல் 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் பைசர் தடுப்பூசி (Pfizer vaccine) செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வவுனியாவில் முதற்கட்டமாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் கல்வி பயலும் 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (21) வியாக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்று வியாழக்கிழமை முதல் வவுனியாவில் 85 பாடசாலைகள் முதல் கட்டமாக மீளத் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.