வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி ரி.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது.
எதிர்வரும் 8ஆம் மாதத்திலிருந்து பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக ஏற்கனவே முதல்வராக கடமை வகித்த கலாநிதி ரி.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேர்ந்த இவர் 1999ஆம் ஆண்டு வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராக தனது கடமையினை ஆரம்பித்திருந்தார்.பின்னர் வளாகத்தின் பல்வேறு உயர் பதவிகளையும், வகித்துள்ளதுடன், 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை வவுனியா வளாகத்தின் முதல்வராக பதவி வகித்து வந்தார்.
தற்போது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பொது நலவாய அமைப்புகளின் மூலம் கிடைக்கப்பெற்ற புலமைப்பரிசில் மூலம் கலாநிதிப்பட்டத்தினையும் அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.