வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் பிரதாபன் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்களைக் கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையஙகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பலரும் சுட்டிக் காட்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், அதனை தாம் மாநகர எல்லைக்குள் நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.